உ.பி.யில் மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள்: யோகி ஆதித்யநாத் முடிவு
இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் முதல் மந்திரியாக 2 ஆவது முறையாக யோகி ஆதித்யநாத் நேற்று பதவியேற்றார். இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் 15 கோடி மக்கள் பயனடைவார்கள் என்று முதல் மந்தரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
ஏழைகளை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், மத்திய, மாநில அரசின் கொள்கைகள் மக்களை சென்றடைய வேண்டும் என்றும், புதிய துணை மந்திரி பிரிஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story