எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம்


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 27 March 2022 12:25 AM IST (Updated: 27 March 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஒரேவிலையில் நீடித்துவந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த 4 நாட்களாக உயர்ந்து வருகிறது. 137 நாட்களுக்கு பின் கடந்த 22-ம் தேதி முதல் பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலை போன்றே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகத்துள்ளது.

இந்த விலை உயர்வால் வாகனஓட்டிகள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்ற உள்ளது. 3 கட்டமாக இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

அதன்படி, எரிபொருள் விலை உயர்வை கண்டித்து வரும் 31-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 2 முதல் 4-ம் தேதி வரை நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் மாவட்ட வாரியாக உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் ஏப்ரல் 7-ம் தேதி மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. 

Next Story