பொதுமக்கள் பிரதமர் மோடியுடனான அனுபவங்களை பகிர புதிய இணையதளம்
பிரதமர் மோடியுடனான பொதுமக்களின் அனுபவங்களை பகிர இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.
தன்னார்வலர் முயற்சி
பிரதமர் மோடியுடன் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் அவற்றில் கிடைத்த உத்வேகமளிக்கும் அனுபவங்களை ஒருங்கிணைத்து பகிரும் வகையில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.
‘modistory.in’ எனப்படும் இந்த இணையதளத்தை மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி சுமித்ரா காந்தி குல்கர்னி தொடங்கி வைத்தார். ஒரு தன்னார்வலர் முன்முயற்சியாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது.
மோடியின் பள்ளி முதல்வர்
பஞ்சாப்பை சேர்ந்த பா.ஜனதா தலைவர் மனோரஞ்சன் காலியா, பிரதமர் மோடி படித்த வேத்நகர் பள்ளி முதல்வர் ராஸ்பிகாரி மணியார் உள்பட மோடியுடன் பழகிய பல்வேறு நபர்களும் தங்கள் அனுபவங்களை இந்த இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
தேர்தல் பிரசாரம் பற்றிய பிரதமர் மோடியின் நுட்பமான புரிதல் மற்றும் வாக்கு சேகரிப்புக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு சாக்லேட்டுகளை எடுத்து செல்ல வேண்டும் என்ற மோடியின் அறிவுரையை காலியா நினைவு கூர்ந்துள்ளார்.
பள்ளி மாணவராக இருந்தபோதே நாட்டின் ஆயுதப்படைகள் மீதான பிரதமரின் ஆழ்ந்த உணர்வுகளை ராஸ்பிகாரி மணியார் விளக்கி உள்ளார்.
நீரஜ் சோப்ரா, கோபிசந்த்
பிரதமர் மோடி தனது ஆரம்பகால கட்சி வாழ்க்கையில், நாடு முழுவதும் கட்சி பணிகளுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நாட்டுக்காக உழைக்க பலருக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியதாக பிரபலங்கள் பலரும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற நீரஜ் சோப்ரா, பேட்மிண்டன் வீரர் கோபிசந்த் உள்ளிட்ட பிற துறை பிரபலங்களும் பிரதமருடனான தங்களின் சந்திப்புகள் மற்றும் அனுபவங்களை இந்த இணையதளத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story