கர்நாடகா, குஜராத்தில் 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்
கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நாளை முதல் தொடங்குகின்றன.
பெங்களூரு,
பல மாநிலங்களில் செயல்முறை தேர்வுகள் ஏற்கெனவே ஆப்லைன் முறையில் நடைபெற்று வருகிறது.
பீகார் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத்தேர்வுகளை நடத்திய நிலையில், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் மார்ச் மாதத்தில் தங்கள் தேர்வுத் தேதிகளை திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில், கர்நாடகாவில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை நாளை முதல் நடத்துகின்றது. அதேபோல குஜராத் மாநிலமும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத்தேர்வுகளை நடத்த உள்ளது.
Related Tags :
Next Story