கர்நாடகா: ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு


image credit:ndtv.com
x
image credit:ndtv.com
தினத்தந்தி 28 March 2022 2:59 PM IST (Updated: 28 March 2022 3:01 PM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்று மாணவிகளுக்கு எடுத்துக்கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெங்களூரு,

இதற்கிடையில், கர்நாடகாவில் நாளை முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. நாளை முதல் வரும் 11-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 8.76 லட்சம் மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுத ஏதுவாக 3 ஆயிரத்து 400 இடங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்வு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.   

இந்நிலையில், மாணவிகள் ஹிஜாப் அணிந்து பொதுத்தேர்வு எழுத அனுமதியில்லை என்று கர்நாடக பள்ளிக்கல்வித்துறை மந்திரி நாகேஷ் நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஐகோர்ட்டு உத்தரவுக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய நாங்கள் அனுமதிக்கவில்லை. மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டு பள்ளி வளாகத்திற்கு வரலாம் என்று கூறினார்.    

இன்று கர்நாடகாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றுவரும்  நிலையில், மாநிலத்தின் ஹுப்பள்ளி மாவட்டத்தில் மாணவி ஒருவர் பர்தா அணிந்து வந்ததால்,  திருப்பி அனுப்பப்பட்டு, பள்ளி சீருடை அணிந்துவந்த பிறகே  தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். ஐகோர்ட்டு உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் மாணவிக்கு எடுத்துக்கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், புர்காவை அகற்றவும், சீருடை அணிந்து வரவும் மாணவிக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல, பாகல்கோட் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஒரு பள்ளி மாணவியிடம், தனது புர்காவை மாற்றிவிட்டு சீருடை அணிந்து வர கேட்டபோது, அந்த மாணவி சீருடை அணிய மறுத்து தேர்வை தவிர்த்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.


Next Story