பாஜவுக்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அவசர அழைப்பு
பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரள வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா,
மத்திய விசாரணை முகமைகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: -
"நமது நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீது பாஜக பலமுறை தாக்குதல் நடத்தி வருகிறது. பாஜக அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து, அமலாக்க இயக்குனரகம், சிபிஐ, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் உள்ளிட்ட மத்திய அமைப்புகளைத் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறது.
இந்த அடக்குமுறை ஆட்சிக்கு எதிர்த்து முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து போரட வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் முன்னோக்கி செல்லும் வழியை பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் நடத்த வேண்டும். ஒவ்வொருவரின் வசதிக்கும் பொருத்தத்திற்கும் ஏற்ப ஓர் இடத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டத்திற்கு வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story