மராட்டிய மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் - மும்பையில் தடுப்பூசி மையங்கள் செயல்படாது என அறிவிப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மும்பையில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியர்களின் புத்தாண்டான குடிபட்வா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்றும், நாளையும் மும்பையில் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படாது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், "இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு இருக்கும். இதேபோல வார விடுமுறை நாள் என்பதால் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு இருக்கும். தடுப்பூசி போடும் பணி வரும் திங்கட்கிழமை (4-ந்தேதி) தொடங்கும். பொது மக்கள் மும்பை மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க கேட்டு கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story