மராட்டியம்: வானத்தில் வேகமாக பயணித்த ஒளி வெள்ளம்..! விண்கற்களா, ராக்கெட்டா என மக்கள் அச்சம்..??


Image Courtesy: ANI
x
Image Courtesy: ANI
தினத்தந்தி 3 April 2022 6:10 AM IST (Updated: 3 April 2022 6:10 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு வானத்தில் அசாதாரண நிகழ்வை மக்கள் கண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை, 

மராட்டிய மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு வானத்தில் வேகமாக நகரும் ஒளி காணப்பட்டது. இந்த அசாதாரண நிகழ்வை மக்கள் தங்கள் செல்போனில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக மராட்டிய மாநிலம் நாக்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா, பர்வானி மாவட்டங்களில் இருந்து வானத்தில் வேகமாக பயணித்த ஒளி வெள்ள காட்சிகள் பதிவாகின. விண்ணில் விண்கற்கள் பயணிக்கும் போது பிரகாசமான கோடுகள் உருவாவது வழக்கம். மிகவும் அற்புதமான இந்த காட்சிகள் பெரும்பாலும் கேமராவில் சிக்குவது கிடையாது.

'ஷூட்டிங் ஸ்டார்ஸ்' என்று அழைக்கப்படும் விண்கற்கள் பாறை போன்றபொருட்களாகும். அவை பூமியின் வளிமண்டலத்தில் மிகப்பெரிய வேகத்தில் நுழைகின்றன. விண்வெளியில் ஒரு தூசி நிறைந்த பகுதியைக் கடக்கும்போது அதிவேகமாக அதாவது வினாடிக்கு 30 முதல் 60 கிமீ வேகத்தில் நுழைகின்றன. அப்போது விண்கல் மழை என்று அழைக்கப்படும் ஒளிக் கோடுகளை உருவாக்குகின்றன.  இந்த காட்சிகள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

முன்னதாக மக்கள் இதனை, ஏதோ ஒரு நாட்டின் செயற்கைக்கோள் தற்செயலாக விழுந்திருக்கலாம் அல்லது வேண்டுமென்றே விழுந்திருக்கலாம். இது விண்கல் பொழிவோ அல்லது தீப்பந்தமாகவோ தெரியவில்லை, ராக்கெட்டாக கூட இருக்கலாம் என்று கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். 

வானியலாளர்கள் தற்போது இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றனர். 



Next Story