தெலுங்கானா முதல்-மந்திரிக்கு டெல்லியில் மருத்துவ பரிசோதனை..!!
தெலுங்கானா முதல்-மந்திரிக்கு டெல்லியில் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தனது இடது கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கை, தோள்பட்டைகளில் வலி இருந்ததினால் அவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட கோளாறு ஏதேனும் இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். அங்கு அவருக்கு நவீன பரிசோதனை முறையான ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சிடி ஸ்கேன் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி சென்றார். சந்திரசேகர் ராவுடன் அவருடைய மனைவி ஷோபாவும், மகள் கவிதாவும் சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றடைந்த சந்திரசேகர் ராவ், அங்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வார் என அதிகாரிகள் வட்டாரம் கூறியது. வேறு எந்த அதிகாரப்பூர்வ நிகழ்விலும் சந்திரசேகர் ராவ் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story