இந்தியாவின் நிலை இலங்கையை விட மோசமடையலாம் - சிவசேனா
சரிவர கையாளாவிட்டால் இந்தியாவின் நிலை இலங்கையை விட மோசமடையலாம் என்று சிவசேனா எம்.பி தெரிவித்துள்ளார்.
மும்பை,
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துவருவதால் பிரதமர் மகிந்தா ராஜபக்சே, அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக இலங்கையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உணவு பொருட்கள், எரிபொருள் உள்பட அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலக வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனர்.
சரிவில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை அரசு எடுக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன. பெரும் நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியா உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் நிலை இலங்கையை விட மோசமடையலாம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், இலங்கையின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது.
இந்தியாவும் இலங்கையின் பாதையிலேயே சென்றுகொண்டிருக்கிறது. நாம் இதை சரியாக கையாளவில்லையென்றால் நம் (இந்தியா) நிலை இலங்கையை விட மோசமடையலாம். பிரதமர் மோடியின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று மம்தா பானர்ஜியும் கூறியுள்ளார்’ என்றார்.
Related Tags :
Next Story