மராட்டியத்தில் கட்டிடத்தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 April 2022 10:32 PM IST (Updated: 5 April 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கட்டிடத் தொழிலாளி வீட்டிற்கு வெளியே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்

மும்பை,

மராட்டியத்தின் நான்டெட் நகரில் கட்டிடத்தொழிலாளியான சஞ்சய் பியானி என்பவர் தன் வீட்டு வாசலில் இருந்து வீட்டிற்குள் செல்லும் போது, பைக்கில் வந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த கொலை சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  ​​தொப்பி அணிந்து கருப்பு உடை அணிந்த இருவர் கட்டிடத்தொழிலாளியை சரமாரியாக  சுட்டுக்கொலை செய்துள்ளனர். 

இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரிய வராத  நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story