நீட் தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு


நீட் தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 April 2022 4:38 PM GMT (Updated: 6 April 2022 4:38 PM GMT)

நீட் தேர்வு எழுதும் நேரம் 200 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நீர் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியுள்ளது. 

தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் (neet.nta.nic.in) சென்று மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். நாடு முழுவதும் தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் போது மொழியை தேர்வு செய்ய வேண்டும். 

நீட் தேர்வுகள் ஓ.எம்.ஆர். தாள்கள் மூலம் நடத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும் என்றும் தேர்வு எழுதுவதற்கான நேரம் 200 நிமிடங்களாக(3 மணி நேரம் 20 நிமிடங்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 20 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story