ஆந்திராவில் பெட்ரோல் பங்கில் 40 லிட்டர் பெட்ரோல் திருடிய மூவர் கைது..!
ஆந்திராவில் பெட்ரோல் பங்கில் 40 லிட்டர் பெட்ரோலை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குண்டூர்,
பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், ஆந்திர மாநிலம் குண்டூரில் பெட்ரோல் பங்க் ஒன்றில் 40 லிட்டர் பெட்ரோலை 3 பேர் திருடியுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிரதிபடு என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்த மூவர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஒரு அறையில் தூங்குவதை அறிந்து அவர்களை அந்த அறையில் வைத்து பூட்டினர்.
அதன்பிறகு இரண்டு 20 லிட்டர் கேன்களில் 40 லிட்டர் பெட்ரோலை திருடிச் சென்றனர். காலையில் ஊழியர்கள் பெட்ரோல் கையிருப்பை கணக்கிட்ட போது, கொள்ளை நடந்ததை அறிந்தனர். இதையடுத்து போலீசில் புகாரளித்தனர். சிசிடிவி காட்சிகளை சோதித்த போலீசார், அதில் பதிவாகியிருந்த காட்சிகள் மூலம் பெட்ரோல் திருடிச் சென்ற 3 பேரை கைது செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில் அவர்கள் மூவரும் கொத்தனார் என்றும் பெட்ரோலை திருடி விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story