ஆந்திராவில் தொழிற்சாலைகளுக்கு 50% மின்வெட்டு அறிவிப்பு


ஆந்திராவில் தொழிற்சாலைகளுக்கு 50% மின்வெட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 8 April 2022 10:35 PM IST (Updated: 8 April 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பிரதேசத்தில் தொழிற்சாலைகளுக்கு 50 சதவீத மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

கோடைக்கால மின்சார தேவை அதிகரித்து வரும் நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் தினமும் 4 முதல் 5 கோடி யூனிட்கள் வரை மின்சார பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக ஆந்திர பிரதேசத்தில் தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகளுக்கு 50 சதவீத மின்வெட்டும், இதர தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்திடம் தற்போது 6.1 கோடி டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. நிலக்கரியை சுத்தப்படுத்தும் மையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் 3 கோடி டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. 

கையிருப்பில் உள்ள 9.1 கோடி டன் நிலக்கரி மூலம் அடுத்த 45 நாட்களுக்கு இந்தியா முழுவதும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியும் என மத்திய மின்சார அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே சர்வதேச சந்தைகளில் நிலக்கரி விலை டன் ஒன்றுக்கு 285 டாலர்களாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story