இந்தியாவில் இருந்து வாழைப்பழம், சோளம் ஏற்றுமதி - கனடா அரசு அனுமதி
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் இதன் மூலம் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
இந்தியா மற்றும் கனடாவின் தேசிய தாவர பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இந்திய வாழைப்பழங்கள் மற்றும் பேபி கார்ன் எனப்படும் மக்காச்சோளத்தை கனடாவிற்கு ஏற்றுமதி செய்ய கனடா அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் மனோஜ் அகுஜாவை கடந்த 7 ஆம் தேதி கனடா தூதர் கேமரூன் மெக்கே சந்தித்து பேசினார். அப்போது இந்திய வாழைப்பழங்கள் குறித்து அவரிடம் வழங்கப்பட்ட வேளாண் தகவல்களின் அடிப்படையில், அதனை உடனடியாக ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story