திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிக நிறுத்தம்


திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிக நிறுத்தம்
x
தினத்தந்தி 11 April 2022 12:59 AM IST (Updated: 11 April 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்காக திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரெயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சத்திரம், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகிற 12-ந்தேதி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் மதியம் வரை மட்டும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

12-ந்தேதி மதியத்திற்கு பிறகு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். 12-ந்தேதி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 13-ந்தேதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பக்தர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story