மாநில கூட்டுறவு அமைப்புகளில் மத்திய அரசு தலையிடாது - அமித்ஷா உறுதி


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 13 April 2022 8:53 AM IST (Updated: 13 April 2022 8:53 AM IST)
t-max-icont-min-icon

மாநில கூட்டுறவு அமைப்புகளில் மத்திய அரசு தலையிடாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்தார்.

புதுடெல்லி, 

கூட்டுறவு கொள்கை தொடர்பான 2 நாள் தேசிய மாநாடு நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில், மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய கூட்டுறவு கொள்கை குறித்து மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். மாநாட்டில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

தற்போதைய சவால்களை எதிர்கொள்ள கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவது அவசியம். புதிய கூட்டுறவு கொள்கை இன்னும் 8 அல்லது 9 மாதங்களில் தயாராகி விடும். இன்னும் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து கூட்டுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் யோசனைகளை தெரிவிக்கலாம்.

மாநில கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாட்டில் தலையிடுவது மத்திய அரசின் நோக்கம் அல்ல. மாநில சட்டங்களில் ஒருமித்த தன்மையை கொண்டுவரவே முயன்று வருகிறோம் என்று அவர் பேசினார்.

Next Story