அமைப்புசாரா தொழிலாளர் நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது - பிரதமர் மோடி


அமைப்புசாரா தொழிலாளர் நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 16 April 2022 3:36 PM IST (Updated: 16 April 2022 3:36 PM IST)
t-max-icont-min-icon

அமைப்புசாரா தொழிலாளர்களாக பணியாற்றும் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

புதுடெல்லி,

அமைப்புசாரா தொழிலாளர் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.  நாட்டின் வளர்ச்சியில், அமைப்புசாரா தொழிலாளர்களாக பணியாற்றும் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, இன்று பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;  

“நாட்டின் வளர்ச்சியில், நமது அமைப்புசாரா தொழிலாளர் சகோதர-சகோதரிகளின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானது.  இதுபோன்ற கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை எளிதாக்க, எங்களது அரசு, எப்போதும் பாடுபட்டு வருகிறது.   

இந்த திட்டங்கள், அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதாக இருந்தாலும், பெருந்தொற்று பாதிப்பின்போது அவர்களுக்கு உதவ, மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன” என்று தெரிவித்தார்.   

Next Story