அசாமில் அல்-கொய்தா பயங்கரவாதிகள் 6 பேர் கைது


அசாமில் அல்-கொய்தா பயங்கரவாதிகள் 6 பேர் கைது
x
தினத்தந்தி 16 April 2022 10:43 PM IST (Updated: 16 April 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

அசாமில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்புடைய 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

அசாம் மாநிலம் பார்பெட்டா மாவட்டத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர் உள்பட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கடந்த மாதம் 4-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பார்பெட்டா மாவட்டத்தில் மேலும் பல அல்-கொய்தா பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் பார்பெட்டா மாவட்டம் ஹவுலி நகரில் அல்-கொய்தா பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று இரவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்புடைய 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 6 பேரும் பார்பெட்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story