டெல்லி: கடந்த 15 நாட்களில் கொரோனா பரவல் 500 சதவீதம் அதிகரிப்பு! அதிர்ச்சி தகவல்


டெல்லி: கடந்த 15 நாட்களில் கொரோனா பரவல் 500 சதவீதம் அதிகரிப்பு! அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 17 April 2022 7:46 PM IST (Updated: 17 April 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

குறைந்தது ஒருவராவது கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சர்வேயில் 19 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும்  லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒரு சர்வே நடத்தியது. 

அதில் டெல்லி மற்றும் டெல்லியின் புறநகர் என்சிஆர் மாவட்டங்களில் உள்ள 11,743 குடியிருப்பாளர்களிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதில் பதிலளித்தவர்களில் 67 சதவீதம் பேர் ஆண்கள், 33 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

டெல்லி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் அவர்களுக்கு தெரிந்தவர்களில், குறைந்தது ஒருவராவது கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சர்வேயில் 19 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15 நாட்களில் டெல்லி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் அவர்களுக்கு தெரிந்தவர்களில் குறைந்தது ஒருவராவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற கேள்விக்கு:-

 *70 சதவீதம் பேர் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றனர்.

 *11 சதவீதம் பேர் ஒருவர் அல்லது இரண்டு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

 *8 சதவீதம் பேர் மூன்றிலிருந்து-5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

 *11 சதவீதம் பேர் சரியாக தெரியவில்லை என்றனர்.

டெல்லியில் நேற்று வெளியிடப்பட்ட சுகாதாரத்துறை அறிக்கையின் படி, ஒரே நாளில் 461 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

டெல்லியில் சமீபத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருக்கும் நிலையில், இந்த சர்வே முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளன. 

முன்னதாக இது போன்றதொரு சர்வே, ஏப்ரல் 2ம் தேதி அன்று நடத்தப்பட்டதில், அன்றிலிருந்து கணக்கிடப்பட்ட கடந்த 15 நாட்களில்,  3 சதவீதம் பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது.

டெல்லி என்சிஆர் என்பது தேசிய தலைநகரப் பகுதியைக் குறிக்கிறது. இது டெல்லியின் முழுப் பகுதியையும் மற்றும் அண்டை மாநிலங்களான (ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான்) ஆகியவற்றின் நகர்ப்புறங்களையும் உள்ளடக்கிய இந்தியாவின் பெருநகரப் பகுதி ஆகும். 


Next Story