சிவசேனா எம்.எல்.ஏ. மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு


சிவசேனா எம்.எல்.ஏ. மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 18 April 2022 9:13 AM IST (Updated: 18 April 2022 9:13 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் சிவசேனா எம்.எல்.ஏ. மனைவி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் மாவட்டம் குர்லா தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ மங்க்னேஷ் கூடல்ஹர். இவரது மனைவி ராஜனி. 

இந்நிலையில், மங்கேஷின் மனைவி ராஜனி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் எம்.எல்.ஏ. வீட்டிற்கு விரைந்து சென்று போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ராஜனியில் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

ராஜனி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளநிலையில் சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து நேரு நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story