கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு - போலீசார் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 April 2022 10:04 AM IST (Updated: 19 April 2022 10:04 AM IST)
t-max-icont-min-icon

காவல் நிலையத்தில் வைத்து அவர் சித்திரவதை செய்யப்பட்டதால், அவர் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளர்.

அரியானா,

கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி அரியானா மாநிலம் ஜூலானாவில் கஞ்சா வைத்திருந்ததாக பாப்பி என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 580 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில், ரோஹ்டக்கில் உள்ள மருத்துவமனையில் பாப்பி திடீரென உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து அவர் சித்திரவதை செய்யப்பட்டதால், அவர் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளர்.

காவல்துறையின் சித்திரவதையால் அவர் இறந்ததாகவும், அவரது உடலில் காயங்கள் இருந்ததாக பாப்பியின் மனைவி ஆஷா மற்றும் அவரது தந்தையும் தெரிவித்தனர். ஏப்ரல் 13 ஆம் தேதி, பாப்பியை அவரது வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் போது போலீசார் அவரை தாக்கியதாக ஆஷா கூறினார். அதன்பிறகு, அவரைச் சந்திக்க குடும்ப உறுப்பினர்களை போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

போலீசாரின் அதிகப்படியான சித்திரவதையால் தனது கணவர் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டிய அவர், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரினார்.

இந்த சம்பவம் குறித்து ஜூலானா காவல் நிலைய அதிகாரி சமர்ஜித் சிங் கூறும்போது, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்றும், பாப்பியின் குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story