“போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியவர்களை அப்பாவிகள் என்று கூற முடியுமா?” - எடியூரப்பா கேள்வி
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியினர் மறைமுகமாக கலவரத்தை ஊக்குவிப்பதாக எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
“உப்பள்ளியில் கலவரம் நடந்துள்ளது. இதன் பின்னணியில் அதன் பின்னணியில் ஒரு முஸ்லிம் அமைப்பின் தலைவர் தான் இருந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். 12 போலீசார் காயம் அடைந்துள்ளனர். இத்தகையவர்களை அப்பாவிகள் என்று கூற முடியுமா?
ஆனால் தவறு செய்தவர்களை போலீசார் கைது செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், அப்பாவிகளை கைது செய்ய கூடாது என்று கூறுகிறார்கள். இதன் மூலம் கர்நாடகத்தில் கலவரத்தை காங்கிரசார் மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள் என்று நினைக்க தோன்றுகிறது. பெங்களூருவில் இருந்து கொண்டு பேசுவது சரியல்ல. அவர்கள் உப்பள்ளிக்கு வந்து சம்பவம் நடந்த பகுதிகளை பார்க்க வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story