சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் எங்கு காணப்பட்டாலும் புல்டோசர் பயன்படுத்தப்படும்! உத்தரகாண்ட் முதல்-மந்திரி
தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், உத்தராகண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி புல்டோசர் அரசியலை கையில் எடுத்துள்ளார்.
டேராடூன்,
உத்தராகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் அக்கட்சியின் சார்பில் முதல் மந்திரியாக இருந்த புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார்.
முதல் மந்திரியாக நீடிக்க, அவர் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.
இதனையடுத்து இப்போது அவர் மீண்டும் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆக, அக்கட்சியை சேர்ந்த சம்பவத் தொகுதி எம்.எல்.ஏ கஹ்டோரி ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில், தற்போது முதல் மந்திரியாக உள்ள புஷ்கர் சிங் தாமி போட்டியிடுவார்.
இந்த நிலையில், தலைநகர் டேராடூனில் உத்தராகண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி பேசியதாவது;-
“நாங்கள் யாருக்கும் எதிராக புல்டோசரை வலுக்கட்டாயமாக பயன்படுத்தவில்லை. சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக புல்டோசர் பயன்படுத்தப்படுகிறது.
சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் எங்கு காணப்பட்டாலும் புல்டோசர் பயன்படுத்தப்படும்.”
இவ்வாறு கூறினார்.
பாஜக அரசின் புல்டோசர் அரசியல் நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், அம்மாநில சட்டசபை தேர்தலில், புல்டோசரை தேர்தல் பிரச்சாரத்தில் அடையாளமாக பயன்படுத்தி வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பின், புல்டோசர் சர்ச்சைக்குரிய வகையில் பிரபலமானது.
பாஜக ஆளும் மாநிலங்களில், புல்டோசர் கொண்டு கட்டிடங்களை தகர்க்கும் பணிகள் ஆங்காங்கே நடந்து எதிர்க் கட்சிகளை கலங்க செய்தன.
இப்போது தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், உத்தராகண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி புல்டோசர் அரசியலை கையில் எடுத்துள்ளார்.
Related Tags :
Next Story