ஜம்மு- பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஒரு பாதுகாப்புப்படை வீரர் வீரமரணம் !
ஜம்முவில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு நகரத்தில் உள்ள சுஞ்ச்வான் கன்டோன்மென்ட் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் அதிகாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு பாதுகாப்புப்படை வீரர் வீர மரணம் அடைந்தார். மேலும் நான்கு வீரர்கள் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்முவில் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 2019 இல் ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீருக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அரசியல் பயணத்திற்கு முன்னதாக, நகரத்தில் உள்ள ஒரு முக்கிய இராணுவ நிலையத்திற்கு அருகே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரிய பாதுகாப்பு கவலையாக உள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story