உலக பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றும் இந்தியா - சர்வதேச நாணய நிதியம் பாராட்டு
2022-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
புதுடெல்லி,
உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் திறன் இந்தியாவிற்கு உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இந்திய பிரிவு தலைவர் நடா சவைரி கூறியுள்ளார். கொரோனா தொற்றால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை வெற்றிகரமாக சமாளித்து இந்தியா மீண்டெழுந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளதால் உக்ரைன் போரால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை இந்தியாவால் எதிர்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக பொருளாதாரத்தில் 7 சதவீதம் பங்களிப்பு செய்யும் இந்தியா, உலக பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2022-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் கணித்துள்ளது. இது முந்தைய கணிப்பில் தெரிவிக்கப்பட்ட 9 சதவீதத்தை விட 0.8 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story