காஷ்மீர்: வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 22 April 2022 10:53 PM IST (Updated: 22 April 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், பிரதமர் மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள நவ்கம் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை குறிவைத்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்தி வருகின்றனர்.

Next Story