ஜம்மு-காஷ்மீரில் கிராம சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் கிராம சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
x
தினத்தந்தி 24 April 2022 1:15 PM IST (Updated: 24 April 2022 1:15 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

ஸ்ரீநகர்,

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் சென்றார்.

காஷ்மீரில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை  பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

500 கிலோ வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டம் தொடக்கம், டெல்லி - அமிர்தசரஸ் - கத்ரா விரைவுசாலைத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

ராட்லே மற்றும் க்வார் புனல் மின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ரூ 3 ஆயிரத்து 500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வாணி கால் குவாசி கண்ட் சாலையில் கட்டப்பட்டுள்ள சுரங்க பாதையையும் பிரதமர் திறந்து வைத்தார் .

அதனை தொடர்ந்து பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீரில் கிராம சபைக் கூட்டத்தில்  உரையாற்றினார்.

Next Story