‘கேந்திரிய வித்யாலயா' பள்ளிகளில் முதலாவது வகுப்பில் சேர 6 வயது விதி சரிதான்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 28 April 2022 2:19 AM IST (Updated: 28 April 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

‘கேந்திரிய வித்யாலயா' பள்ளிகளில் முதலாவது வகுப்பில் சேர 6 வயது விதி சரிதான் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுடெல்லி, 

மத்திய அரசின் ‘கேந்திரிய வித்யாலயா' பள்ளிகளில் முதலாவது வகுப்பில் சேர குறைந்தபட்சம் 6 வயது இருக்க வேண்டும் என்பது சரிதான் என டெல்லி ஐகோர்ட்டின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

பள்ளிகளில் முதலாவது வகுப்பு சேர குறைந்தபட்சம் 6 வயது இருக்க வேண்டும் என்பது தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டது என்றும், இது கல்வி உரிமை சட்டத்துக்கு எதிராக இல்லை என்றும் மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது. அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதலாவது வகுப்பில் சேர குறைந்தபட்சம் 6 வயது இருக்க வேண்டும் என்ற விதி சரிதான் என டெல்லி ஐகோர்ட்டு தனி நீதிபதி அளித்த தீர்ப்பை உறுதி செய்கிறோம். மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம் என தெரிவித்தனர்.

Next Story