அமிர்தசரஸ் அருகே பாக். எல்லையில் இருந்து வந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
பாகிஸ்தான் நாட்டில் இருந்து பறந்து வந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர்.
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய கிராமமான தானோ கலன் என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று அதிகாலை நேரத்தில் அங்கு மெல்லிய சத்தம் கேட்டது.
இதையடுத்து, உஷாரான பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, டிரோன் ஒன்று பறப்பது தெரியவந்தது. இதையடுத்து, டிரோனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு டிரோனை கைப்பற்றினர்.
பாகிஸ்தான் பகுதியில் இருந்து பறந்து வந்த இந்த டிரோன், சீனாவில் தயாரிக்கப்பட்டது ஆகும். உளவு பார்க்கும் நோக்கில் இந்த டிரோனை பாகிஸ்தான் பறக்க விட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Related Tags :
Next Story