மின்சார தட்டுப்பாடு விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நாட்டில் நிலவி வரும் நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின்சார தட்டுப்பாடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் பிரதமர் மோடியை குறைகூறியுள்ளது.
நாடு முழுவதும் மின்சார தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் தினசரி 8 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘பிரதமரின் வாக்குறுதிகளுக்கும் நோக்கங்களுக்கும் இடையேயான தொடர்பு எப்போதும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மின்சார தட்டுப்பாட்டில் உங்கள் (பிரதமர்) தோல்விக்கு யாரை குற்றம் சாட்டுவீர்கள்? நேருவையா? மாநில அரசுகளையா? அல்லது பொதுமக்களையா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்தியாவில் மின்சாரம் உபரியாக இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்த உரைகள் அடங்கிய வீடியோ தொகுப்பு ஒன்றையும் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். நாட்டில் நிலவி வரும் நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின்சார தட்டுப்பாடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் பிரதமர் மோடியை குறைகூறியுள்ளது.
Related Tags :
Next Story