உத்தர பிரதேசத்தில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் தடம்புரண்டது
15 பெட்டிகள் தடம்புரண்டதால், பெட்டிகள் சரிந்து அதில் இருந்த நிலக்கரி தண்டவாளத்தின் அருகே சிதறியது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பர்தானா மற்றும் ஏக்தில் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் நேற்று சரக்கு ரெயில் ஒன்று தடம்புரண்டது. இந்த ரெயில் அரியானாவில் உள்ள கலனோர் பகுதிக்கு நிலக்கரியை ஏற்றிச் சென்றுள்ளது.
ரெயிலில் உள்ள 15 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டதால், பெட்டிகள் சரிந்து அதில் இருந்த நிலக்கரி தண்டவாளத்தின் அருகே சிதறியது. உடனடியாக ஆக்ரா மற்றும் கான்பூரில் இருந்து மீட்பு ரெயில்கள் விரைந்து வந்தன. இதனால் அந்த பாதையில் ரெயில் சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story