அதிகரிக்கும் வெப்பநிலை: ஒடிசாவில் பள்ளி வகுப்பு நேரம் மாற்றம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 May 2022 4:54 PM IST (Updated: 1 May 2022 4:54 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசா மாநிலத்தில் வெப்பநிலை அதிகரித்து கானப்படுவதால், பள்ளி வகுப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

ஒடிசா,

ஒடிசா மாநிலத்தில் வெப்பநிலை மிகவும் அதிகரித்து கானப்படுகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு பள்ளிகள் இயங்கும் நேரத்தை மாற்றி அமைத்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது, அதன்படி பள்ளி வகுப்புகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை இயங்கும் என்று மாநில அரசு அறிவித்து உள்ளது. 

நாளை முதல் இந்த அறிவிப்பின் படி வகுப்புகள் செயல்படும் என்று அரசு கூறியுள்ளது. மேலும், தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என்றும் அரசு அறிவித்து உள்ளது. 


Next Story