மராட்டியம்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற இருவர் கைது
மராட்டியத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
தானே,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூர் பகுதியில் அதிகாலை 4 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இரு இளைஞர்கள் சந்தேகப்படும் படி நடந்துகொண்டர்.
இதனை தொடர்ந்து போலீசார் அருகே சென்று பார்த்தபோது, இருவரும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் மும்பையில் உள்ள பாண்டுப்பில் வசிக்கும் சந்தீப் ஷிண்டே (20) மற்றும் வேதாந்த் சிர்முலே (19) என அடையாளம் காணப்பட்டனர்.
பின்னர் இருவரையும் கைதுசெய்த போலீசார், தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story