அரியானாவில் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் நேரம் மாற்றம்..!


கோப்புப் படம் PTI
x
கோப்புப் படம் PTI
தினத்தந்தி 2 May 2022 8:16 PM IST (Updated: 2 May 2022 8:16 PM IST)
t-max-icont-min-icon

வெப்ப அலை காரணமாக அரியானா மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சண்டிகர்,

கடந்த சில வாரங்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகள் கடுமையான வெப்ப அலையில் தத்தளித்து வருகின்றன. வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலை முறையே  35.9 மற்றும் 37.78 டிகிரி செல்சியசாக இருக்கிறது.

அரியானா மாநிலத்தில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை வகுப்பு நேரத்தை மாற்றபட்டுள்ளதாக அரியானா பள்ளிக் கல்வி கூடுதல் தலைமைச் செயலாளர் மகாவீர் சிங் தெரிவித்துள்ளார்.

வருகிற புதன் கிழமை (04.05.2022) முதல் இந்த நேரமுறை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வடமேற்கு இந்தியாவிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்லி, பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரபிரதேசம் உட்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை நீங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Next Story