கோவோவாக்ஸ் தடுப்பூசி: இந்தியாவில் இப்போது குழந்தைகளுக்கு கிடைக்கிறது...!! - ஆதர் பூனவாலா
இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு, இப்போது கோவோவாக்ஸ் தடுப்பூசி கிடைப்பதாக சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனவாலா தெரிவித்துள்ளார்.
புனே,
இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு, கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி அவசர பயன்பாட்டு அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியது.
இந்த தடுப்பூசி தனியார் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும், இதன் விலை ரூ.900 மற்றும் ஜி.எஸ்.டி.யுடன் சேவை கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று முன்தினம் தெரிவித்தன.
இந்த தடுப்பூசியை தயாரித்து வழங்கும் புனே இந்திய சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனவாலா, நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
(அமெரிக்காவின்) நோவோவாக்ஸ் நிறுவனத்தார் உருவாக்கிய கோவோவாக்ஸ் தடுப்பூசி, இந்தியாவில் இப்போது குழந்தைகளுக்கு கிடைக்கிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படுகிற ஒரே தடுப்பூசி இதுதான். இது ஐரோப்பாவிலும் விற்கப்படுகிறது. இந்த தடுப்பூசி 90 சதவீதத்துக்கும் அதிகமான செயல்திறன் கொண்டுள்ளது.
இது நமது குழந்தைகளை பாதுகாக்க, மற்றொரு தடுப்பூசியை வழங்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் கீழானது என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story