பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்குள் தவறுதலாக நுழைந்த நபர் பாக். படையினரிடம் ஒப்படைப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த நபர் பாகிஸ்தான் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் கடந்த 28-ம் தேதி இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒரு நபர் இந்திய எல்லைக்குள் நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக, துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர் அந்த நபரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி பகுதியை சேர்ந்த முகமது ஹசன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நல்லெண்ண அடிப்படையில் பிடிபட்ட முகமது ஹசனை இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடம் இன்று ஒப்படைத்தனர்.
பூஞ்ச் மாவட்டம் தர்ஹண்டி பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு சோதனைச்சாவடியில் முகமதுவை இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story