நள்ளிரவில் வீட்டில் தனியாக இருந்த திருமணமான இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது!


நள்ளிரவில் வீட்டில் தனியாக இருந்த திருமணமான இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது!
x
தினத்தந்தி 4 May 2022 10:43 PM IST (Updated: 4 May 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

2 குழந்தைகளுக்கு தாயாக உள்ள இளம்பெண்ணை இளைஞன் ஒருவர் தன் நண்பர்கள் உதவியோடு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

விஜயநகரம்,

ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரத்தில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயாக உள்ள 26 வயதுடைய இளம்பெண்ணை 20 வயது இளைஞன் ஒருவர் தன் நண்பர்கள் உதவியோடு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு நேரத்தில், அந்த பெண் அவரது இல்லத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

பாதிக்கப்பட்டவர்  பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர்வாழ்வாதாரம் தேடி விஜயநகருக்கு வந்து, வாடகைக்கு வீடு எடுத்து கடந்த சில மாதங்களாக  தங்கியுள்ளார்.

அந்த பெண் தனது கணவரை பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு, அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் ஒருவர் தனது பைக்கில் லிப்ட் கொடுத்தார். பின்னர் அந்த பெண் தனது ஆண் நண்பருடன் வீட்டிற்குள் சென்றபோது, 20 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் கதவைத் தட்டினர்.

அவள் கதவைத் திறந்ததும், அவர்களில் ஒருவன் மட்டும் வீட்டிற்குள் நுழைந்து, அந்த பெண்ணின் ஆண் நண்பரை அந்த இடத்தை விட்டு வெளியேற மிரட்டி உள்ளான். அவரும் பயந்து போய் வெளியேறிவிட்டார் என தெரிகிறது. அவனுடன் வந்திருந்தவர்கள் ஆண் நண்பரை கட்டுப்படுத்தியதாகவும் தெரிகிறது.

பின்னர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு அவனும் அங்கிருந்து தப்பியோடி விட்டான்.

அந்த பெண், மேலும் சிலருடன் செவ்வாய்க்கிழமை காலை காவல்துறையை அணுகி புகாரளித்தார்.

“குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக  காவலில் எடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்று இளைஞர்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தாலும், குற்றத்தை ஆதரித்ததற்காக நாங்கள் மூவருக்கு எதிராகவும் வழக்குகளை பதிவு செய்வோம்” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த கொடூர சம்பவத்தையடுத்து, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, குற்றங்களை தடுக்க காவல்துறை தவறிவிட்டது என தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story