காஷ்மீர் எல்லையில் ரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு... வெளியான திடுக் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 May 2022 9:47 AM GMT (Updated: 5 May 2022 10:30 AM GMT)

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் விதமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த சுரங்கத்தை தோண்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர்.

கடந்த 22ம் தேதி காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் ஊடுருவிய ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த இரு தற்கொலைப்படை தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். சட்டவிரோத சுரங்கப்பாதைகள் மூலம் அவர்கள் ஊடுருவி இருக்க கூடும் என கணித்த அதிகாரிகள் எல்லையில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். 

இந்த நிலையில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில், சம்பாவில் சிறிய அளவில் நிலத்தடியில் இருந்த பள்ளம் ஒன்று சுரங்கப்பாதையாக சென்றது கண்டறியப்பட்டது.  இந்திய எல்லையில் இருந்து 900 மீட்டர் தொலைவிலும், பாகிஸ்தானின் எல்லை கோட்டில் இருந்து 150 மீட்டர் இடைவெளியிலும் சுரங்கப்பாதை செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் விதமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த சுரங்கத்தை தோண்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Next Story