மும்பை; எல்.ஐ.சி அலுவலகத்தில் தீ விபத்து!
எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளன.
மும்பை,
மும்பையின் சான்டாக்ரூஸ் பகுதியில் உள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) அலுவலக கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயை அணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை யாருக்கும் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
2-வது மாடியில் செயல்பட்டு வந்த அலுவலகத்தில் உள்ள 'சம்பள சேமிப்பு திட்டம்' பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது மாடியோடு வேறெங்கும் பரவாமல் தீ மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
Related Tags :
Next Story