இந்திய பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தான் டிரோன்: பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு..!
இந்திய பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தான் டிரோன் மீது எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் இருந்து இந்திய பகுதியை நோக்கி பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானம் (டிரோன்) ஒன்று பறந்து வருவதை கண்ட எல்லை பாதுகாப்புப் படையினர் அதன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஆர்.எஸ்.புரா செக்டாரில் உள்ள அர்னியா பகுதியில் நேற்றிரவு 7.25 மணியளவில் இந்த ஆளில்லா விமானம் வந்துள்ளது. உஷாரான எல்லை பாதுகாப்பு படையினர் 8 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து அந்த ஆளில்லா விமானம் திரும்பிச் சென்றது.
எனினும் அந்த விமானத்தில் இருந்து எந்த பொருளாவது வீசப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக ஜம்மு எல்லைப்புற பிஎஸ்எஃப் அதிகாரி ஜெனரல் எஸ்பி சந்து தெரிவித்துள்ளார். மேலும் ஆளில்லா விமானம் பறந்து வந்த முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எல்லை தாண்டிய நிலத்தடி சுரங்கப்பாதையை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டு பிடித்து அழித்த மூன்று நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story