படிக்க வந்த இளம்பெண்ணுக்கு 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை; விருது பெற்ற எழுத்தாளர் மீது வழக்குப்பதிவு!
குற்றம் சாட்டப்பட்ட எழுத்தாளர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதை அவரது மொபைலில் இருந்து நான் கண்டுபிடித்தேன்.
புதுடெல்லி,
இளம்பெண்ணை 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது 32 வயதுடைய இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எழுத்தாளர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் குற்றம் சாட்டினார். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், டெல்லி திமர்பூர் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து எப்ஐஆர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி முகர்ஜி நகரில் வாடகைக்கு வசித்து வரும் அந்த பெண், மத்திய குடிமைப்பணி (யுபிஎஸ்சி) தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர், சாகித்ய அகாடமி விருது பெற்ற அந்த எழுத்தாளரை சமூக வலைதளத்தில் சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் நண்பர்களானார்கள்.
2013 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்காகச் சென்ற நான் வீடு திரும்ப தாமதமாகிவிட்டது. அதற்காக எழுத்தாளர் என்னை துஷ்பிரயோகம் செய்து கடுமையாக அடித்துள்ளார். அதன்பின்னர், நான் அழ ஆரம்பித்தேன். ஆனால் அவர் என்னை பலவந்தமாக பலாத்காரம் செய்தார். மறுநாள் வந்து மன்னிப்பு கேட்க ஆரம்பித்தார். அவரும் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். நான் இதை நம்பியிருந்தேன்.
ஆனால், அவர் போலீஸ் நடவடிக்கையை தவிர்க்கவே, என்னை திருமணம் செய்து கொள்வதாக பொய்யாக உறுதியளித்தார். கடந்த ஆண்டு, குற்றம் சாட்டப்பட்ட எழுத்தாளர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதை அவரது மொபைலில் இருந்து நான் கண்டுபிடித்தேன்.
இவ்வாறு அந்த பெண் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த வழக்கில், போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணின் தந்தையை அழைத்து பேசியுள்ளார். எழுத்தாளரை மிரட்டி பணம் பறிப்பதற்காகவே அந்த பெண் அவரை மிரட்டுவதாகக் கூறியுள்ளார் என்றும் எப்ஐஆர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story