உலகின் மிக பெரிய பால் பேனாவை உருவாக்கி இந்தியர் சாதனை

உலகின் மிக பெரிய பால் பேனாவை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்தியர் ஒருவர் இடம் பிடித்து உள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா. இவர் தனது குழுவினருடன் சேர்ந்து உலகின் மிக பெரிய பால் பேனாவை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.
அதன் எடை 37.23 கிலோ ஆகும். 5.5 மீட்டர் நீளம் கொண்டது. இதற்கு முன்பு 1.45 மீட்டர் நீளத்துடன் இருந்த மிக பெரிய பேனாவின் சாதனையை இந்த பேனா முறியடித்து உள்ளது.
இதனை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டு உள்ளது. அதனுடன், விதிமுறைகளின்படி இந்த பேனாவின் முனையில் இருந்து, எழுதும்போது மை வெளியே வருகிறது என அதன் செயல்பாடு பற்றியும் தெரிவித்து உள்ளது.
அதுபற்றி வெளியிடப்பட்ட மற்றொரு வீடியோவில், சீனிவாசா தனது குழுவினருடன் சேர்ந்து அந்த பேனாவை பயன்படுத்தி படங்களை வரைகின்றார்.
இந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 265க்கும் கூடுதலானோர் விமர்சனங்களையும் பதிவிட்டு உள்ளனர்.
அதில் ஒருவர், வாளை விட பேனா வலிமை வாய்ந்தது என இதனை மனதில் வைத்தே நான் முன்பு கூறினேன் என தெரிவித்து உள்ளார். இதனை உருவாக்குவதகு தேவையான உழைப்பு அசாதாரணம் வாய்ந்தது என்று மற்றொருவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story