பந்திப்போரா என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திப்போரா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த என்கவுண்டரில் குல்சார் அகமது என்ற பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடமிருந்து வெடிமருந்து, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story