வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்காக வருவோருக்கு சிறப்பு தளம் - சுகாதாரத்துறை மந்திரி தகவல்


வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்காக வருவோருக்கு சிறப்பு தளம் - சுகாதாரத்துறை மந்திரி தகவல்
x
தினத்தந்தி 12 May 2022 9:37 PM GMT (Updated: 2022-05-13T03:07:51+05:30)

இந்தியாவை உலகளாவிய மருத்துவ மதிப்பு மையமாக மாற்ற உறுதி பூண்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, ‘பிராண்ட் இந்தியா’ (இந்திய வணிக முத்திரை) உருவாக்குவது பற்றி டெல்லியில் நேற்று மூத்த ஐ.எப்.எஸ். அதிகாரிகளுடன் வட்டமேஜை மாநாடு நடத்தி பேசினார்.

அப்போது அவர், “ மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சிகிச்சை பெற விரும்புவோர் வசதிக்காகவும், நம்பகமான அனைத்து தகவல்களையும் வழங்குவதற்காகவும் ‘ஒன் ஸ்டெப் போர்டல்’ (ஓரு சிறப்பு தளம்) அமைக்கப்படும்” என தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், பாரம்பரிய மருத்துவ துறையை மேலும் பலப்படுத்துவதன்மூலம் இந்தியாவை உலகளாவிய மருத்துவ மதிப்பு மையமாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டார். இந்தியாவில் சிகிச்சைக்காக வர விரும்புவோருக்கு வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் உதவும் மையங்களை ஏற்படுத்தவும் அவர் யோசனை தெரிவித்தார்.

இந்தியாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற வருவோருக்கும், அவர்களுக்கு உதவிக்காக வருவோருக்கும் மருத்துவ விசா வசதி 165 நாடுகளுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story