முதல்-மந்திரி நிகழ்ச்சியில் உணவுக்காக சண்டைபோட்டுக்கொண்ட ஆசிரியர்கள் - வைரலாகும் வீடியோ


முதல்-மந்திரி நிகழ்ச்சியில் உணவுக்காக சண்டைபோட்டுக்கொண்ட ஆசிரியர்கள் - வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 13 May 2022 8:24 AM GMT (Updated: 13 May 2022 8:24 AM GMT)

தட்டு காலியாகி விடும் என கருதி பலா் முண்டியடித்துக் கொண்டு தட்டுக்களை பெற முயன்றனா். ஒருக்கட்டத்தில் அந்த நபாிடம் இருந்து தட்டுகளை பிடுங்கினா்.

லுதியானா,

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில்,  முதல் -மந்திரி  பகவான் மன் தலைமையில்  பள்ளி கல்வித்துறையில்  ஏற்படுத்தப்பட வேண்டிய சீா்திருத்தங்கள் தொடா்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு அரசுப்பள்ளிகளின் தலைமையாசிாியா்கள் மற்றும் ஆசிாியா்கள் கலந்து கொண்டனர்.

 இந்தநிலையில்,  மதிய உணவு இடைவேலையின் போது  இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அதில் தட்டை பெறுவதற்காக ஆசிாியா்கள் ஒருவருக்கொருவா் போட்டி போட்டுக் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், நபா் ஒருவா் உணவுக்கான  தட்டுக்களை அனைவருக்கும் வழங்கிக் கொண்டிருந்தாா். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் தட்டு காலியாகி விடும் என கருதி பலா் முண்டியடித்துக் கொண்டு தட்டுக்களை பெற முயன்றனா். ஒருக்கட்டத்தில் அந்த நபாிடம் இருந்து தட்டுகளை பிடுங்கினா்.

அனைவருக்கும் முன்மாதிாியாக இருக்க வேண்டிய ஆசிாியா்கள், உணவுக்காக போட்டி போட்டுக் கொண்டது சமூக வலைதளங்களில் விமா்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து  டுவிட்டாில் பதிவிட்ட நபா், இவா்கள் உண்மையில் ஆசிாியா்கள் தானா? என கேள்வி எழுப்பி உள்ளாா். அப்படி இவா்கள் ஆசிாியா்கள் என்றால் இவா்கள் எப்படி தங்கள் மாணவா்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பாா்கள் என விமா்சித்துள்ளாா்.

Next Story