இமாச்சலப்பிரதேசம்: சிம்லா அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி, 2 பேர் காயம்
இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சிம்லா,
இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக சிம்லா மாவட்டத்தில் உள்ள பாத் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிலர் காரில் சென்றுள்ளனர். ராம்பூர் புஷாஹரில் உள்ள சாலையில் புனா கிரஷர் பாயின்ட் அருகே வந்த போது 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லதா தேவி (வயது 45), அவரது மகள் அஞ்சலி (வயது 22), மனோரமா தேவி (வயது 43), மற்றும் கிரீஷ் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும் கார் டிரைவர் அசோக் குமார் மற்றும் குல்தீப் ஆகியோர் காயம் அடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு கானேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story