டெல்லியில் வணிகக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 13 May 2022 5:27 PM GMT (Updated: 2022-05-13T22:57:23+05:30)

டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி, 

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இன்று மாலை 3 மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. கட்டிடத்தில் இருந்து சுமார் 60-70 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 20 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்பு துறை இயக்குனர் அதுல் கர்க் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் காயங்களுடன் மீட்கப்பட்ட 10 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 24 தீயணைப்பு குழுவினர் தீயை அணைக்கும் பணியில் போராடி வருகின்றனர். கிடைத்திருக்கும் சிசிடிவி காட்சிகளின்அடிப்படையில், முதல் தளத்திலிருந்தே தீ பரவியிருக்கலாமென தெரியவந்துள்ளது.

Next Story