பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் - ப.சிதம்பரம்


பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 14 May 2022 3:16 PM IST (Updated: 14 May 2022 3:16 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

உதய்பூர்,

உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தன் சிவிர்’ இரண்டாம் நாள் மாநாடு தொடர்பாக டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது, டெல்லியில் முண்டுகா பகுதியில் நேற்று நடந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார். 

சிந்தன் சிவிர் கூட்டத்தில் நேற்று கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் ஆலோசனை நடத்தியதாகவும், இன்று மற்றும் நாளையும் ஆலோசனை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும்  நாட்டில் வேலையின்மை விகிதம் 7.88% ஆக உயர்ந்துள்ளதாக சாடிய ப.சிதம்பரம், மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பொருளாதாரம், விவசாயம், விவசாயிகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஆலோசிக்க உள்ளது தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார். 

பொருளாதார கொள்கைகளில் உடனடி மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு உயர்த்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story