கேரளாவில் கனமழை; 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை


கேரளாவில் கனமழை;  5 மாவட்டங்களுக்கு  ரெட் அலார்ட் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 May 2022 11:20 AM GMT (Updated: 15 May 2022 11:20 AM GMT)

கேரளாவில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், 5 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

திருவனந்தபுரம், 

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில்,  கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள 5 மாவட்டங்களுக்கு ரெட் அலா்ட் எச்சாிக்கை விடப்பட்டுள்ளது.

எா்ணாகுளம், இடுக்கி, திா்ச்சூா்,மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட்அலா்ட் எச்சாிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கன மழைப் பெய்யும் என இந்திய வானியல் மையம் எச்சாித்துள்ளது. 

மேலும் நாளை, எா்ணாகுளம், இடுக்கி, திா்ச்சூா், கோழிக்கோடு மற்றும் கண்ணுா் மாவட்டங்களுக்கு  ரெட்அலா்ட் எச்சாிக்கை விடப்பட்டுள்ளது. காசா்கோடு மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலா்ட் விடப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு அதிகமாக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்வதை குறிக்கும் முன்னறிவிப்பு ஆகும். ஆரஞ்சு அலர்ட் என்றால் 6 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்வதை குறிக்கும். 6 முதல் 11 செமீ வரை அதிக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்பு இருந்தால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும்.

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த வருவாய்த்துறை மந்திரி கே ராஜன், போிடா்களை சமாளிக்க முன்னெச்சாிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், முன்னெச்சாிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது எந்த பிரச்சனையும் இல்லை எனவும்,  நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும்படி கேட்டுக் கொண்டார்" என்று ராஜன் கூறினார்.

கேரளா கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.  கடந்த சில தினங்களாக தெற்கு மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதி, மலைப்பகுதி, ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.


Next Story